Sunday 19th of May 2024 09:22:56 PM GMT

LANGUAGE - TAMIL
-
வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் A9 வீதியை மறித்து போராட்டம்!

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் A9 வீதியை மறித்து போராட்டம்!


வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியை மறித்து இன்று மதியம் தமது போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர்ந்து மூன்றாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீள பெற்று தருமாறு கோரிக்கை விடுத்து கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநர் எடுத்த முயற்சியின் பயனாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தொண்டர்களாக கடமையாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் முகமாக சுகாதார பணியாளர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

எனினும் குறித்த நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளர்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக குறித்த நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், நிரந்தர நியமன கடிதம் பெற்ற சுகாதார பணியாளர்கள் 454 பேர் தமக்கு உரிய தீர்வினை வழங்குமாறும் நீண்ட காலமாக தொண்டு அடிப்படையில் வைத்தியசாலைகளில் கடமையாற்றிய தாகவும் எனவே தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE